எங்களது குறிக்கோள்:

ROH தமிழ் என்பது ரிவைவ் அவர் ஹார்ட்ஸின் தமிழ் மொழி ஊழியம் ஆகும். ரிவைவ் அவர்ட்ஸ்(எங்கள் இருதயங்களை உயிர்ப்பியும்) 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஊழியம் பெண்களை கிறிஸ்துவுக்குள் வளர்ந்தோங்க அழைக்கிறது.

தொடக்கத்திலிருந்து, கிறிஸ்துவை மகிமை படுத்துவதுமஂ, விடுதலைத் தரும் வேத வசனங்களின் உண்மையை பெண்களின் உள்ளங்களில் பிரகாசிக்க செய்வதும் இந்த ஊழியத்தின் நோக்கம் ஆகும். நான்சி டிமாஸ் வால்கமூத் என்பவர் ஒரு வேதாகம போதகர் மறஂறுமஂ ரிவைவ் அவர் ஹாட்ஸ் என்ற இந்த ஊழியத்தை நிறுவியவர் ஆவார்.

 எங்களது செய்தி:

இந்த ஊழியம் ஆண்டவரின் வார்த்தைகளை மேன்மைபஂ படுதஂதுவதினஂ மூலமஂ, பெணஂகளை விடுதலை, நிறைவான வாழ்வு, கனி கொடுக்கும் ஜீவியம் ஆகிய இவைகளைப் கிறிஸ்துவுக்குள் பெற்றுக் கொள்ள அழைக்கிறது.

 குழப்பமான செய்திகள் நிறைந்த இந்த உலகத்தில், ரிவைவ் அவர்ட்ஸ் ஊழியம் - பெண்மையைக் குறித்த ஆண்டவரின் திட்டத்தைப் பெண்கள் கண்டுபிடித்து , அதை தழுவி கொள்ளவும், கிறிஸ்துவின் அழகை தன்னை சுற்றியுள்ள உலகிற்கு பிரதிபலிக்க செய்யவும், அடுத்த தலைமுறையினருக்கு திட்டமிட்டு சத்தியத்தைக் கடத்திச் செல்லவும் , தங்கள் குடும்பமஙஂகளஂ, தங்கள் ஆலயஙஂகளஂ , தங்களை சுற்றியுள்ள மக்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கவும் அவர்களை அழைக்கின்றது.

நான்சியை பற்றிய செய்தி:

தன் எழுத்துக்கள், பாட்காஸ்ட்டுகள்., மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக.,நான்சி டிமாஸ் வால்கமூத் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உள்ளத்தில் விடுதலை, நிறைவான வாழ்வு, கனி கொடுக்கும் ஜீவியம் ஆகிய இவைகளை கிறிஸ்துவுக்குள் பெற்றுக்கொள்ள அழைக்கிறார்.