கதறி அழுகிற சவால
30 நாட்கள் கதறி அழுகின்ற சவாலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த ஜெப சவால் உங்களுக்கு கொடுக்கப்படும் இன்னொரு வேலை அல்ல; இது ஒரு அறைகூவல். நம் உலகில் நம்மை சுற்றி நடப்பதை கவனிக்கவும், அந்த பாரத்தை இருதயத்தில் சுமக்கவும், 30 நாட்களை ஒருமனப்பட்ட, தீவிரமாக கதறி அழுது ஜெபிப்பதற்கு ஒதுக்கவும் கிறிஸ்துவின் திருச்சபையை அழைக்கும் ஒரு ஆன்மீக அழைப்பு இது. கண்களைத் திறந்து, இருதயங்களைத் தாழ்த்தி, தேவனை ஆழமாகத் தேடும் இந்த பயணத்தில் ஒன்றாக இணைந்து இந்த சவாலை சந்திப்போமா?